கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் ‘பிக் பாஸ் 2’ தொலைக்காட்சி நிகழ்ச்சி வரும் ஜூன் 17 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் இல்லாதவர்களையும் டிவி முன்பு உட்கார வைத்த இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போது இந்த நிகழ்ச்சியின் புரோமோஷன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில், இதில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்பார்கள்? என்பதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், பிக் பாஸ் 2 வில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பட்டியல் என்று சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பட்டியல் ஒன்று வைரலானது. ஆனால், அது போலியானது என்று தெரிய வந்தது.
இந்த நிலையில், பிக் பாஸ் இரண்டாம் பாகத்தில் பங்கேற்க இருப்பவர்களில் 7 பேர்களது விபரம் வெளியாகியுள்ளது. அதில் இரண்டு பேர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ரம்பா மற்றும் சினேகா என்றும் கூறப்படுகிறது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...