நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் ஹார்பிக்கின் ‘சொச் பாரத்’ பிரச்சாரத்தின் தென்னிந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பிரச்சாரத்தின் வடஇந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள அக்சய் குமாருடன் கைகோர்த்துள்ளார் கணேஷ் வெங்கட்ராமன்.
நடிகர் கணேஷ் வெங்கடராமன் தென்னிந்தியா முழுவதும் அனைவருக்கும் தெரிந்த புகழ்பெற்ற நடிகர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் நற்பெயரும், புகழும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்சய் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் மும்பையில் இரண்டு விளம்பர படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்கள். இதை பற்றி நாம் அவரிடம் கேட்டபோது, “நான் அக்ஷய் குமாரின் மிகப்பெரிய ரசிகன். இப்போதும் அவர் மது அருந்தாமல், எந்த தீய பழக்கங்களும் இல்லாமல், உடலை கட்டுப்பாட்டோடு வைத்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. அவரோடு சேர்ந்து பணியாற்றியது மறக்க முடியாத ஓர் அனுபவம். நான் தமிழ் படப்பிடிப்பிலும் அவர் ஹிந்தி படப்பிடிப்பிலும் கலந்துக்கொண்டோம்.
தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் படி நமது வீட்டை நாம் சுத்தமாக வைப்பதிலிருந்து தான் துவங்குகிறது. இந்திய அரசாங்கத்துடன் ‘ஹார்பிக்’ நிறுவனம் இந்த திட்டத்துக்காக கை கோர்த்துள்ளது சிறப்பானதாகும்.” என்றார்.
தமிழில் இரண்டு படங்களிலும் , மலையாளத்தில் ‘மை ஸ்டோரி’ எனும் படத்தில் ப்ரிதிவி ராஜ், பார்வதி உடன் சிறப்பு தோற்றத்தில் கணேஷ் வெங்கடராமன் நடித்துள்ளார்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...