Latest News :

இந்த ஆண்டு அனுஷ்காவுக்கு திருமணம்!
Monday June-11 2018

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் அனுஷ்காவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் தீவிரம் காட்டி வந்தாலும், அனுஷ்கா பிடிகொடுக்காமல் இருந்தார். இதற்கிடையே அவருக்கும் நடிகர் பிரபாஷுக்கும் காதல் என்று தகவல் வெளியானது.

 

ஆனால், இதை மறுத்த பிரபாஸ் அனுஷ்கா தனது நல்ல நண்பர், என்று கூறிவிட்டார். இதையடுத்து அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை பார்ப்பதில் அவரது பெற்றோர் தீவிரம் காட்டி வந்தாலும், அனுஷ்கா திருமண விஷயத்தில் தெளிவான முடிவு எடுக்காமல் இருந்தாராம். தற்போது அவர் திருமணத்திற்கு ஓகே என்று பெற்றோர்களிடம் கூறிவிட்டாராம்.

 

இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள அனுஷ்காவின் பெற்றோர்கள், அவருக்கு இந்த ஆண்டே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்களாம். தற்போது அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருவதால், இந்த ஆண்டு அனுஷ்கா இல்லற வாழ்வில் நுழைவது உறுதி, என்று தெலுங்கு சினிமா வட்டாராத்தில் பேச்சு அடிபடுகிறது.

Related News

2773

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery