குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு பேரணியை நடிகையும், யுனிசெப் (UNICEF) நல்லென்ன தூதருமான திரிஷா தொடங்கி வைத்தார்.
ஆண்டு தோறும் ஜூன் 12 ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி இன்று சென்னை அண்ணாநகரில் தமிழ்நாடு அரசு தொழிலாளர்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இதில் யுனிசெப் (UNICEF) தூதுவர் நடிகை திரிஷா கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின பேரணியை துவக்கி வைத்தார். அங்குள்ள பூங்காவில் துவங்கிய இந்த பேரணியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு, தங்களது கைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகை திரிஷா, ”அப்போது பேசிய நடிகை திரிஷா, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை, கொத்தடிமை முறையை தடுத்து நிறுத்தி, குழந்தைகளுக்கான கல்வி தரும் இயக்கமாக யுனிசெப் (UNICEF) விளங்கி வருகின்றது.” என்றார்.
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...