‘8 தோட்டாக்கள்’ படத்தை தயாரித்த வெற்றிவேல் சரவணா சினிமாஸ் எம்.வெள்ளபாண்டியன், இரண்டாவது படமாக‘ஜீவி’ என்ற படத்தை தயாரிக்கிறார்.
இதில் ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த வெற்றி ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக அஸ்வினி, மோனிகா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், மைம் கோபி, ரோகிணி, ரமா ஆகியோர் நடிக்கிறார்கள்.
பாபு தமிழ் கதை, வசனம் எழுதும் இப்படத்தை அறிமுக இயக்குநர் வி.ஜே.கோபிநாத் இயக்குகிறார். பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார். வைரபாலன் கலையை நிர்மாணிக்கிறார். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ.பி.கார்த்தியேகயன் இப்படத்தின் லைன் புரொடியராக பணியாற்றுகிறார்.
படம் பற்றி கூறிய இயக்குநர், “இப்படம் விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் இடையில் உள்ள மனித உணர்வுகள் சார்ந்த தொடர்பியல் ரீதியில் கதை அமைக்கப்பட்டுள்ளதால், இது முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி வருகிறது”. என்றார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...