‘கபாலி’, ‘காலா’ என்று ரஞ்சித்துடன் தொடர்ந்து இரண்டு படங்களில் பணியாற்றிய ரஜினிகாந்த், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். இதற்காக அவர் டார்ஜிலிங்கில் முகாமிட்டுள்ளார்.
இந்த நிலையில், ரஜினிக்காக எழுதிய கதையில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த படம் விஜயின் 62 வது படம். ஆம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படத்தை ரஜினிக்காக முருகதாஸ் உருவாக்கினாராம்.
‘கபாலி’ படப்பிடிப்பில் இருக்கும் போதே முருகதாஸிடம் கதை கேட்ட ரஜினிகாந்த், அந்த கதையை வெகுவாக பாராட்டியதோடு தனது அடுத்தப் படம் இது தான், என்றும் முருகதாஸிடம் நம்பிக்கை கொடுத்திருக்கிறார். ஆனால், முருகதாஸ் மகேஷ் பாபுவை வைத்து ‘ஸ்பைடர்’ படத்தை இயக்கிக் கொண்டிருந்ததால், அந்த இடைவெளியில் மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘காலா’ வில நடிக்க, முருகதாஸ் ரஜினிக்காக எழுதிய கதையை விஜயை வைத்து எடுக்க முடிவு செய்துவிட்டாராம்.
இப்படி, ரஜினியிடம் இருந்து கைமாறியிருக்கும் இந்த படம், அரசியல் ஆக்ஷன் என்று படும் படு விறுவிறுப்பாக இருப்பதோடு, சமூக பிரச்சினையையும் பேசுவதால் பட்டையை கிளப்பும் என்று கூறப்படுகிறது.
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...