சென்னை,மார்ச் 29 : பிரபல நடிகை ஜெயப்பிரதா, தனது மகன் சித்துவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள படம் ‘உயிரே உயிரே’. இப்படத்தில் நாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார். விஷாலின் ‘சத்யம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக உள்ளது.
தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ‘இஷ்க்’ படத்தின் ரீமேக்கான இப்படத்தை நடிகை ஜெயப்பிரதா, இயக்குநர் ராஜசேகரிடம் தமிழில் எடுக்க வேண்டும், என்று சொன்ன போது, அவர் ஜெயப்பிரதாவிடம், ஹன்சிகா நாயகியாக நடித்தால் நான் படத்தை இயக்குகிறேன், என்று கூறினாராம்.
அதனாலேயே, ஹன்சிகா தவிர வேறு யாரையும் நாயகியாக்க கூடாது, என்ற முடிவில் அவரை அனுகி ஒப்பந்தம் செய்தாராம் ஜெயப்பிரதா.
காதல் படமான இப்படத்திற்கு அனுரூபன் இசையமைக்க, விவேகா பாடல்கள் எழுதியுள்ளார்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...