வரும் ஜூன் 17 ஆம் தேதி தொடங்க இருக்கும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்க போகிறார்கள் என்பது மக்களிடம் பெரும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பட்டியல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், நிகழ்ச்சி குழுவினர் போட்டியாளர்களின் பட்டியலக் பரம ரகசியமாக வைத்துள்ளனர்.
இருந்தாலும், அவ்வபோது சிலரது பெயர்கள் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் கசியவும் செய்கிறது. தற்போது பவர் ஸ்டார் பங்கேற்பது உறுதியாகியுள்ள நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்த மும்தாஜும் பங்கேற்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் முதல் சீசனிலேயே மும்தாஜுக்கு அழைப்பு வந்ததாம். ஆனால், அப்போது அவர் நிராகரித்து விட்டாராம். ஆனால், பிக் பாஸ் மூலம் ஓவியா, ஜூலி போன்றவர்கள் பிரபலமடைந்ததை பார்த்த மும்தாஜ், இரண்டாம் சீசனில் பங்கேற்க சம்மதித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் மும்தாஜின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து கசிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...