தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை பெற்றிருக்கும் நயந்தாரா, அஜித், கமல், சிரஞ்சீவி என முன்னணி ஹீரோக்களது படங்களில் நடிப்பதோடு, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார்.
அதே சமயம், அவ்வபோது தனது காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலாவும் சென்று வருபவர், தனது காதலரை ஹீரோவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதோடு, அவருக்கு முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்குவதற்கான வாய்ப்பையும் பெற்று தருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், சமீபத்தில் நடிகர் விஜயை சந்தித்து பேசியுள்ளார். அநேகமாக விஜய்க்கான கதையை சொல்வதற்கான சந்திப்பாக தான் இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ், இயக்கத்தில் தனது 62 வது படத்தில் நடித்து வரும் விஜயின் 63 வது படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார்? என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், வினோத், மோகன் ராஜா என சில இயக்குநர்கள் பெயர்கள் அடிபடும் நிலையில், தற்போது விக்னேஷ் சிவனும் இதில் இணைந்துள்ளார்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...