தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் விஜய், தனது ஆரம்ப காலத்தில் சினிமாவில் பல பிரச்சினைகளை சந்தித்த பிறகே வெற்றி ஹீரோவாக உருவெடுத்தார். அதே சமயம், விஜயை பெரிய ஹீரோ ஒருவருடன் நடிக்க வைத்தால் அவர் மக்களிடம் பிரபலம் ஆவார், என்பதாலேயே விஜயகாந்தை கவுரவ வேடத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்க வைத்தார். அப்படத்திற்கு பிறகு விஜய் மக்களுக்கு தெரிந்த நடிகராகிவிட்டார்.
இப்படி தனக்காக உதவி செய்த விஜயகாந்துக்கு நன்றியை வெறும் வார்த்தைகளால் சொன்னால் மட்டும் போதாது என்று கருதும் விஜய், அவரது மகன் சண்முகபாண்டியனை ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாரிக்கப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதிபடி விஜய் தற்போது அறிமுக இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாராம்.
விஜயே கதையை கேட்டு வருவதால், பல இயக்குநர்கள் ஆர்வமாக அவரை அனுகினாலும், அவர் கேட்பது சண்முகபாண்டியனுக்காக என்பது தெரிந்ததும் சற்று தயங்குகிறார்களாம்.
எது எப்படியோ விஜய் தயாரிப்பில் விஜயகாந்தின் வாரிசு நடிப்பது உறுதியாகிவிட்டது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...