பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது குறித்து பல நடிகைகள் பேசி வருகிறார்கள். சில முன்னணி நடிகைகளும் இந்த விஷயத்தை தைரியமாக பேசினாலும், தங்களுக்கு இதுபோன்ற அனுபவம் நேர்ந்ததில்லை, என்று கூறுகின்றனர். ஆனால், சில வளரும் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த இதுபோன்ற பாலியல் தொல்லை சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள்.
அந்த வரிசைல், ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருக்கும் நடிகை ஒருவர் தன்னை இயக்குநர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தது குறித்து கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் தொடங்கிய தெலுங்கு ‘பிக் பாஸ் 2’ வில் கலந்துக்கொண்டிருப்பவர் சஞ்சனா ஆன். மாடலிங் துறையைச் சேர்ந்த இவர், தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து கூறுகையில், “மாடலிங் செய்து கொண்டிருந்த போது பட வாய்ப்பு தேடி கொண்டிருந்தேன். அப்போது ஒரு இயக்குநர் பட வாய்ப்பு பேசும்போது சினிமா பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றார்.
அவர் சொன்ன அந்த வார்த்தை அப்போது புரியவில்லை, பின்பு நண்பர்களால் தெரிந்துகொண்டு அவரை நேரில் சந்தித்து அடி கொடுத்தேன். பின் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 2 இரண்டில் பங்கேற்பதற்கு முன்பாக அளித்த பேட்டியில் இந்த விஷயத்தை சஞ்சனா கூறியிருந்தாலும், அவர் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருப்பதால் இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...