Latest News :

விஜய் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் போட்ட மாஸ் பிளான்!
Friday June-15 2018

வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜயின் பிறந்தநாள். விஜயின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வந்தாலும், இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு விஜய் தடை விதித்துவிட்டார்.

 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தால், இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கும் விஜய், தனது ரசிகர்களுக்கும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம், என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

இந்த நிலையில், விஜயின் பிறந்தநாளுக்கு அவரது 30 சூப்பர் ஹிட் படங்களை ரிலீஸ் செய்ய ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால், இது தமிழகத்தில் இல்லை கேரளாவில். 

 

தமிழகத்தை போலவே கேரளாவிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களும் விஜயின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில், இந்த ஆண்டு பிறந்தநாளன்று கேரளாவில் உள்ள 30 நகரங்களில், கில்லி, சச்சின், துப்பாக்கி, கத்தி, திருப்பாச்சி, திருமலை உள்ளிட்ட விஜயின் 30 சூப்பர் ஹிட் படங்களை ரிலீஸ் செய்ய ரசிகர்கள் பிளான் செய்துள்ளனர்.

Related News

2816

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery