தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவான சிவகார்த்தியேன், நடிக்கும் படங்கள் அனைத்தும் பெரிய பட்ஜெட் படங்களாக உருவாகி வருகிறது. ’வேலைக்காரன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‘சீமராஜா’. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என்று சிவகார்த்திகேயனை வைத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்த பொன்ராம் இயக்கும் இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். முடியும் தருவாயில் உள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் வரும் பிளாஷ்பேக்கில் ஒரு சிவகார்த்திகேயன் வருகிறாராம். இதில் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அதுமட்டும் அல்ல இந்த கதாபாத்திரம் சிவகார்த்திகேயன் இதுவரை நடிக்காத வேடமாக இருக்குமாம். இதற்காக சிவகார்த்திகேயன், தற்போது தாடி வளர்த்து வருகிறார்.
வரும் ஜூன் 19 ஆம் தேதியோடு அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்துவிடுமாம், அதன் பிறகு பின்னணி வேலைகளில் ஈடுபடும் படக்குழுவினர் படத்தை விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...