சுசிகணேசன் இயக்கும் ‘திருட்டுப்பயலே-2’ வில் அமலா பால், பாபி சிம்ஹா, பிரசன்னா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற போது, அமலா பால் யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து எஸ்கேப்பாக நினைத்த, தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பாபி சிம்ஹாவுடன், அமலா பால் படு நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, அமலா பாலின் போனிற்கு மெசஜ் ஒன்று வந்ததாம், அதில் தனது அப்பாவுக்கு உடல் நிலை மோசமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மெசஜை பார்த்தவுடன், யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து எஸ்கேப்பாக்க முடிவு செய்தார். ஆனால் சுசிகணேசனுக்கு விஷயம் தெரிந்துவிட்டது.
செல்போன் டவர் அங்கு கிடைக்காததால், டவர் கிடைக்கும் இடத்திற்கு சென்று போன் பேசிவிட்டு வருகிறேன், என்று கூறிய அமலா பால், அப்படியே தனது உதவியாளருடன் அங்கிருந்து எஸ்கேப்பாக பிளான் போட்டிருக்கிறார். ஆனால், இதை ஏற்கனவே அறிந்த சுசி, துணைக்கு நானும் வருகிறேன் என்று கூறி அமலா பாலுடன் சென்றிருக்கிறார். பிறகு செல்போன் டவர் கிடைத்த இடம் வந்ததும், அமலா பால் தனது அம்மாவை தொடர்பு கொண்டு பேசிய போது, பல நாட்களாக அமலா பாலை போனில் தொடர்பு கொள்ள முடியாத காரணத்தால், அவரது அம்மா இப்படி ஒரு பொய்யான மெசஜை அனுப்பியது தெரிய வந்துள்ளது.
இதை அறிந்த படக்குழுவினர், பொய்யான மெசஜை நம்பி அமலா பால் சென்றிருந்தால் படப்பிடிப்பு அனைத்தும் நாசமாகியிருக்குமே, என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். நல்ல வேலையாக அமலா பாலுடன் சுசி கணேசன் படகில் பயணித்தது நல்லதா போச்சு என்று கூறி, அனைவரும் பெருமூச்சு விட்டார்களாம்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...