Latest News :

நடிகை கஸ்தூரி மீது போலீசில் புகார்!
Saturday June-16 2018

பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் ட்விட்டரில் கருத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகை கஸ்தூரி, தமிழக அரசியல் தொடர்பாகவும், அரசியல்வாதிகள் பற்றியும் விமர்சித்து வருகிறார். அப்படி அவர் சமீபத்திய நிகழ்வு ஒன்று குறித்து விமர்சித்ததற்கு அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

எடப்பாடி பழனிசாமி அணி, தினகரன் அணி என இரு பிரிவுகளாக செயல்பட்டு வரும் அதிமுக எம்.எல்.ஏ-க்களில், தினகரன் அணியில் இருந்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது தொடர்பாக 14-ந் தேதி தீர்ப்பு வெளியானது. 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.

 

உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மதுரை போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர் வாதத்திடம் திராவிடர் விடுதலைக்கழக மதுரை மாவட்டச் செயலாளர் மணியழகன் புகார் மனு அளித்தார். அதில் நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தும், திரு நங்கைகளை அவமதித்தும் கருத்துகளை வெளியிட்ட நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Related News

2828

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery