தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெருமையோடு நம்பர் ஒன் ஹீரோயினாக வலம் வரும் நடிகை நயந்தாரா, 6 க்கும் மேற்பட்ட படங்களை கையில் வைத்திருக்கிறார்.
என்னதால் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், தனது காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் டூர் சென்று, அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டும் வருபவர், தற்போது நடிகர் ஒருவருக்கு தான் நடிக்கும் படங்களில் சிபாரிசு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயந்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோலமாவு கோகிலா’. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும், இந்த பாடலில் நயந்தாராவை ஒருதலையாக காதலிக்கும் யோகி பாபுவின் அக்கபோர் அனைத்து ஏரியாவிலும் பிரபலமாகிவிட்டது.
இந்த நிலையில், யோகி பாபுவின் காமெடியால் கவரப்பட்டிருக்கும் நயந்தாரா, தான் நடிக்கும் படங்களில் யோகி பாபுவை நடிக்க வைக்கும்படி சிபாரிசு செய்கிறாராம். அவர் புதிதாக ஒப்பந்தமான ‘லட்சுமி’ குறும்பட இயக்குநர் படத்திலும் யோகி பாபுவை சிபாரிசு செய்திருக்கிறாராம்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...