மக்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 2’ நேற்று தொடங்கி விட்டது. முதல் நாள் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி கலக்கலான ஆட்டத்தோடு அறங்கேறியது.
சமூக வலைதளங்களில் உலா வந்த பிக் பாஸ் போட்டியாளர்களின் லிஸ்டில் இருந்த ஜனனி ஐயர், யாசிகா ஆனந்த், மும்தாஜ் உள்ளிட்ட சிலர்களின் பெயர்கள் இருந்தன.
நேற்று போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டுக்குள் வரும்போது, மகத், பொன்னம்பலம் ஆகியோர் பேசும் போது ”அடுத்து வரபோறது ஆணா பொண்ணா என மகத் கேட்க, அதற்கு பொன்னம்பலம், “ரெண்டுகட்டானா வந்துட்டா என்ன பன்றது” என கூறினார்.
பொன்னம்பலத்தின் இந்த கமெண்ட் மூன்றாம் பாலினத்தவரை விமர்சிப்பது போலிருக்கிறது என சமூக வலைதளங்களில் உடனே சர்ச்சைகள் தொடங்கிவிட்டது.
பொன்னம்பலத்திற்கு எதிராக பலர் பதிவிட்டு வந்தாலும், பலர் பொன்னம்பலம் ராக்ஸ் என கருத்து பதிவிட்டு அவருக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...