’மெர்சல்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையைக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.
இப்படத்தில் ராதாரவி, எழுத்தாளர் பழ.கருப்பையா ஆகியோர் வில்லன்களாக நடிப்பதோடு, நடிகை வரலட்சுமியும் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சில சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை தற்போது ‘தளபதி 62’ என்று அழைக்கின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வரும் ஜூன் 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...