சினிமாவில் பட வாய்ப்புக்காக நடிகைகளுக்கு கொடுக்கப்படும் செக்ஸ் தொல்லைகள் குறித்து பல நடிகைகள் பேசி வருகிறார்கள். தற்போது நடிகைகளை பேட்டி எடுக்கும் பல ஊடகங்கள் அவர்களிடம், சினிமாவில் செக்ஸ் தொல்லை, பற்றிய கேள்வியை மறக்காமல் கேட்டு விட, அவர்களும் அது பற்றி எந்தவித தயக்கமும் இன்றி பேசுகிறார்கள்.
அப்படி எந்தவித அச்சமும் இன்றி பேசும் நடிகைகளில் ஒருவர் தான் ராதிகா ஆப்தே. இவர் சமீபத்தில் தென்னிந்திய பிரபல நடிகர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், இந்தி சினிமாவில் தனக்கு நேர்ந்த செக்ஸ் தொல்லைகள் குறித்தும் ஆப்தே பல பேட்டிகளில் பேசியிருந்தார்.
இவர் பேசுவது தான் சர்ச்சையை ஏற்படுத்தும் என்றால், இவர் நடித்த சில படங்களில் அதைவித சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சில படங்களில் அதிகமான ஆபாசக் காட்சிகளிலும் இவர் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த நிலையில், தான் ஆபாசமான காட்சிக் கொண்ட படங்களில் நடித்தது எதனால் என்பது குறித்து விளக்கம் அளித்திருக்கும் ராதிகா ஆப்தே, “நான் எந்த பின்னணியும் இல்லாமல்தான் சினிமாவுக்கு வந்தேன். நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டேன். அதை என்னால் தவிர்க்க முடியவில்லை. சினிமா துறைக்கு வந்தபோது எந்த மாதிரி கதைகளில் நடிக்க கூடாது என்று நினைத்து இருந்தேனோ அந்த படங்களில்தான் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

என் பிழைப்புக்கு தேவையான பணத்துக்காக அதுபோன்ற மோசமான படங்களை என்னால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது. இப்போது எனக்கு பெயர் புகழ் கிடைத்து விட்டது. நிறைய பட வாய்ப்புகளும் வருகின்றன. இதனால் எல்லா கதைகளுக்கும் ஒப்புக்கொள்ளாமல் எனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...