ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் தலைப்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
’தளபதி 62’ என்று அழைக்கப்பட்ட இப்படத்திற்கு ‘சர்கார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி இணையும் மூன்றாவது படமான இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயின் பிறந்தநாளன்று வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தால், இந்த வருடம் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு விஜய் அவரது ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். மேலும், தனது பிறந்தநாளன்று தனது புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதையும் தவர்க்குமாறு அவர் கேண்டுகொண்டுள்ளார்.
எனவே, தான் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்பாக, அதாவது இன்று (ஜூன் 21) விஜயின் புதிய படமான ‘சர்கார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...