‘காலா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதில் ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி ஆகியோர் நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 10 நாட்களாக குர்சியாங் என்ற இடத்தில் உள்ள அலிதா தனியார் விடுதியில் ரஜினிகாந்த் தங்கியிருந்தார். அந்த விடுதியில் உள்ள ‘டைரக்டர்ஸ் பங்களா’ என்று அழைக்கப்படும் தனி இல்லத்தில் அவர் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், ரஜினி தங்கியிருந்தால், அவர் நினைவாக அந்த இல்லத்தின் பெயரை ‘ரஜினிகாந்த் வில்லா 3’ என்று விடுதியின் உரிமையாளரான பெயரை மாற்றியுள்ளார். மேலும், அதே பகுதியில் ரஜினிகாந்த் டீ அருந்திய டீ கடை ஒன்றின் பெயரை ‘தலைவா ஸ்பெஷல்’ என்றும் மாற்றியுள்ளனர்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...