நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அதர்வா, ‘செம போத ஆகாதே’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் ஆகியிருக்கிறார். வரும் ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துக்கொண்ட அதர்வா, பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, திரைப்படம் தயாரிப்பு என்பது மிகப்பெரிய போராட்டம், என்று கூறி வருத்தப்பட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ”பட விழாக்களில் பல தயாரிப்பாளர்கள் தங்கள் கஷ்டங்களை சொல்வதை கேட்டு இருக்கிறேன். அப்போதெல்லாம் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று நான் நினைத்தது உண்டு. ஆனால் படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை இப்போது அனுபவ பூர்வமாக உணர்கிறேன்.
படத்தை எடுத்து திரைக்கு கொண்டு வருவது பெரிய போராட்டமாக இருக்கிறது. இந்த படத்தை ஏற்கனவே ரிலீஸ் செய்ய திட்டமிட்டு மற்றவர்களுக்கு உதவ கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. அதற்காக வருத்தப்படவில்லை. இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ஜாலியான படமாக இதை எடுத்துள்ளார். ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
நீண்ட நாட்களாக சீரியஸ் படங்களில் நடித்தேன். இப்போது பொழுதுபோக்கு அம்சம் உள்ள படத்தில் நடித்துள்ளேன். நல்ல படத்தில் நடித்த திருப்தி இருக்கிறது. இந்த படம் மது பழக்கத்தை ஊக்குவிக்கவில்லை. போதையில் ஒருவன் முட்டாள் தனமான வேலை செய்கிறான். அதனால் வரும் பிரச்சினைகள் என்ன என்பது தான் கதை.” என்றார்.
மேலும், எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்? என்று கேட்டதற்கு, “எனக்கு இன்னும் கல்யாண வயதே வரவில்லையே!” என்று கூறி நைசாவுகா நழுவிவிட்டார்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...