கவர்ச்சி நடிகைகள் யார், கதாநாயகிகள் யார், என்று தெரியாத அளவுக்கு திரைப்படங்களே படு கவர்ச்சியான முறையில் உருவாகும் நிலையில், தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடைகையாக வலம் வந்த நடிகை சஞ்சனா சிங்கின் செல்போன் தொலைந்து போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ரெனிகுண்டா’ படத்தின் மூலம் விலை மாது கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சனா சிங், பல படங்களில் ஒரு பாடலுக்கு குட்தாட்டம் போடுவது, கவர்ச்சியான வேடங்களில் நடிப்பது என்று கோடம்பாக்கத்தில் காலத்தை ஓட்டினாலும், முன்னணி ஹீரோயின்களுக்கு கிடைக்கும் சகல வசதிகளுடன் தான் சென்னையில் வாழ்ந்து வந்தார். இதற்கு காரணம் அவரது கலை தாகம் தான் என்பதை அனைவரும் அறிவர்.
இந்த நிலையில், சென்னை அண்ணா நகரில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சஞ்சனாவிடம் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், அவரது செல்போனை திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருடப்பட்டிருக்கும் நடிகை அஞ்சனாவின் செல்போனில் பல ரகசிய பதிவுகள் இருப்பதாகவும், அதனை மறைக்கவே இந்த திருட்டு சம்பவம் நடந்ததாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதே சமயம், நடிகைகள் எப்போதும் தங்களது செல்போன்களை தங்களிடம் வைத்துக் கொள்ளாமல், தங்களது உதவியாளர்களிடம் மட்டுமே கொடுத்து வைத்திருப்பார்கள், இதை உடற்பயிற்சி செய்யும் போதும் கடைபிடிக்கும் நடிகைகள், தனியாக வெளியே செல்லும் போது மட்டும் எப்படி கடைபிடிக்காமல் இருப்பார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சஞ்சனாவில் செல்போன் திருட்டு விஷயத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக கூடும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருப்பதால், தற்போது கோடம்பாக்கமே பதற்றத்தில் இருக்கிறது.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...