முன்னணி நடிகைகள் கோடி கணக்கில் சம்பளம் வாங்குவது ஒரு பக்கம் இருக்க, முன்னாள் கதாநாயகிகளான தற்போதைய சீனியர் நடிகைகளில் சிலர் பெரும் தொகையை சம்பளமாக கேட்டு தயாரிப்பாளர்களை தெரிக்க விடுகிறார்களாம்.
’பாகுபலி’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ரம்யா கிருஷ்ணன், தனது சம்பளத்தை கோடியில் தான் தொடங்குகிறாராம். அதனால் அவர் வீட்டு பக்கம் செல்லவே தயாரிப்பாளர்கள் யோசிக்க, தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகை ஒருவருக்கு வெறும் 4 காட்சிகளில் நடிப்பதற்கு மட்டுமே ரூ.40 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பது அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.
ஆம், பெல்லகொண்டா ஸ்ரீனிவாஸ் - ராகுல் பிரீத் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஜெய ஜானகி நாயகா’ என்ற படத்தில் நடிகை ஆணி விஸ்வநாத் முக்கிய கதாபார்த்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் மொத்தமே 4 காட்சிகளில் மட்டுமே அவர் வருகிறாராம். அதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ.40 லட்சமாம்.
இந்த தகவலை படத்தின் இயக்குநர் பொய்யப்பட்டி சீனு தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கேத்ரின் தெரசாவுக்கு பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...