ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, “எங்கம்மா....நீ...எங்கம்மா..” என்று கேட்கும் வகையில் கவிதை ஒன்று எழுதிய பாடலாசிரியரும் கவிஞருமான சினேகன், தற்போது கமல்ஹாசனின் அரசியல் பயணத்திற்கான பாடல்களை எழுதியுள்ளார்.
கமல்ஹாசன் தொடங்கியுள்ள ‘மக்கள் நீதி மய்யம்’ அரசியல் கட்சியில் நடிகர் நடிகைகள் பலர் இணைந்து வருகிறார்கள். கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பாடலாசிரியர் சினேகனும் கமல் கட்சியில் இணைந்துவிட்டார்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக ‘இது நம்மவர் படை’ என்ற தலைப்பில் சினேகன் பாடல்கள் எழுதியுள்ளார். இதற்கு தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார்.
இந்த பாடல்களின் வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெற இருக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொடண்டகள் கலந்துக்கொள்ளும் இவ்விழாவில் அக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பாடல்களை வெளியிடுகிறார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...