பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சிறைச்சாலை’. அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள சிறைச்சாலைப் பற்றியும், அங்கிருந்த கைதிகள் எப்படிப்பட்ட கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பதையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியானது. இதில் பிரபு மற்றும் மோகன்லால் இருவரும் நடித்திருந்தார்கள்.
இந்த நிலையில், இப்படம் வெளியாகி 22 வருடங்கள் ஆன நிலையில், மீண்டும் பிரபுவும், மோகன்லாலும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தையும் பிரதர்ஷனே இயக்கப் போகிறார்.
கேரளாவில் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த கடற்படைத் தலைவர் குஞ்சலி மரக்கார், பிரிட்டீஷ்காரர்களை கடுமையாக எதிர்த்தவர். அவரது வாழ்க்கை வரலாறு படமாக உருவாக இருக்கும் இப்படம் இயக்குநர் பிரிதர்ஷனின் கனவு படம் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...