“என்ன கொடுமை சார்...” என்ற ஒற்றை வசனத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் பிரபலமான பிரேம்ஜியின் சினியா பயணம் என்னமோ இசைக் கலைஞராக தொடங்கினாலும், தற்போது அவரை ஒரு நடிகராகத் தான் கோடம்பாக்கம் அங்கீகரித்திருக்கிறது.
ஆனால், தான் இசையமைப்பாளராக அங்கீகரிக்கப்படவே விரும்புகிறேன், என்று பல இடங்களில் கூறும் பிரேம்ஜிக்கு அத்தகைய அங்கீகாரத்தை பெற்றுத் தரப்போகும் படம் ‘ஆர்.கே.நகர்’ என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இசையமைப்பாளராக சில படங்களில் தனது திறமையை பிரேம்ஜி நிரூபித்திருந்தாலும், அவரது இசையமைப்பில் உருவாகியுள்ள ‘ஆர்.கே.நகர்’ படத்தில் இடம்பெற்ற “பப்பர மிட்டாய்...” பாடல் சமீபத்தில் வெளியாகி சென்சேஷனல் ஹிட் ஆகியுள்ளது.
ஒரு பாடலின் உண்மையான வெற்றி என்பது யூடியூப் பார்வைகள் மற்றும் ஹாஷ்டேக் மூலம் மட்டுமே வரையறுக்கப்படுவதில்லை. மக்களை உடனடியாக முணுமுணுக்க, பாட வைப்பதிலும், விழாக்களில் ஒலிபரப்புவதிலும் இருக்கிறது. இந்த பாடல் கல்லூரி மாணவர்களிடமும், டீனேஜர்களிடமும் மிகவும் பிரபலமாகி இருக்கிறது. ரயில் பயணங்களில் குழுவாக இணைந்து பாடி மகிழ்ச்சி அடைகிறார்கள்.
காஞ்சனா லோகன் எளிமையான பாடல் வரிகளும், கானா குணா அதை பாடிய விதமும் நிச்சயமாக அதை ஒரு வெற்றி பாடலாக்கி இருக்கிறது.
திறமையான இயக்குனரான சரவண ராஜன் (வடகறி புகழ்) இயக்கத்தில் வைபவ், சனா அல்தாஃப் மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அஞ்சனா கீர்த்தி, சந்தனா பாரதி, சுப்பு பஞ்சு, இனிகோ பிரபாகரன், கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், டி.சிவா மற்றும் சில முக்கிய நடிகர்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.
பிரேம்ஜியின் இசை குறித்து கூறும் இயக்குநர் சரவண ராஜன், “பிரேம்ஜி இசைத்திறமை மிகுந்த ஒரு கலைஞர். மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட ஒரு இசையமைப்பாளராகவே நான் அவரை உணர்கிறேன். இன்றைய ட்ரெண்டில் இருப்பது அவரின் பலம். அவருடைய வெளித்தோற்றத்துக்கு மாறாக, பிரேம்ஜி மிகவும் தீவிரமான இசையமைப்பாளர். பின்னணி இசை கோர்ப்பில் பிரேம்ஜி மிகச்சிறந்தவர். அவருக்கு ஒரு இசையமைப்பாளராக கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை ஆர் கே நகர் நிச்சயம் பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்.” என்றார்.
பிரேம்ஜி அமரன் தவிர்த்து, ஒளிப்பதிவாளராக எஸ்.வெங்கடேஷ் மற்றும் படத்தொகுப்பாளராக பிரவீன் கே.எல் ஆகியோரும் பணியாற்றியுள்ளனர்.
ஷ்ரத்தா எண்டர்டெயின்மெண்ட், பத்ரி கஸ்தூரியுடன் இணைந்து, பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் வி.ராஜலட்சுமி இப்படத்தை தயாரிக்கிறார்.
Reliance Retail’s premium fashion and lifestyle brand AZORTE made waves in the South with the opening of its all-new store at Phoenix Marketcity, Chennai...
கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ்...
தொடர் வெற்றி பட நாயகனான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டியூட்’ திரைப்படம், இந்த தீபாவளி பண்டிகைக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது...