செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்து வரும் சூர்யா, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ‘சூர்யா 37’ என்று அழைக்கின்றனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக சாயீஷா நடிக்கிறார். முக்கிய மோகன் லால், அல்லு சிரிஷ், இயக்குநர் சமுத்திரக்கனி, பொம்மன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்க, கேவ்மிக் யு அரி ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று லண்டனில் பூஜையுடன் தொடங்கியது. இதில் சூர்யா, சாயிஷா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
பயணம் சம்மந்தமான கதையை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு நியூயார்க், பிரேசில், மும்பை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
பனைமரம் வளர்க்கப்பட வேண்டும், பனைத்தொழிலும் பனைத் தொழிலாளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்...
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குமார சம்பவம்' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் சார்பாக வெற்றிமாறன் தயாரிப்பில், வர்ஷா இயக்கத்தில், அனுராக் காஷ்யப் வழங்கும் படம் ’பேட் கேர்ள்’...