நடிகர் நடிகைகள் திருமணம் செய்துக்கொண்டாலும் சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விடுகிறார்கள். இதுபோன்ற திருமண முறிவு சினிமா வட்டாரத்தில் அதிகரித்து வருகிறது. அதே சமயம், விவாகரத்து வாங்கிக்கொள்ளும் நடிகர் நடிகைகள் மறுமனமும் செய்துக் கொள்கிறார்கள்.
அந்த வகையில், தனது முதல் கணவரான பிரபல நடிகரிடம் இருந்து விவாகரத்து பெற்ற ஒருவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தயாராகிக் கொண்டிருக்க, அந்த நடிகரின் ரசிகர்களிடம் இருந்து அவருக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாணின் இரண்டாவது மனைவி ரேணு தேசாய். இவர் பவன் கல்யாணிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு ஆண், பெண் பிள்ளை இருக்கிறார்கள்.
இதற்கிடையே, ரேணு தேசாய் இரண்டாவது திருமணத்திற்கு தயராகி வருகிறார். இதை நாம் ஏற்கனவே நம் இணையதளத்தில் தெரிவித்திருந்தோம். இதற்கிடையே, ரேணு தேசாய்க்கு சமீபத்தில் திருமண நிச்சதார்த்தம் நடைபெற்றது. விரைவில் அவரது திருமணம் நடைபெற உள்ளது. ஆனால், மாப்பிள்ளை யார் என்பதில் ரகசியம் காக்கின்றனர்.
இந்த நிலையில், பவன் கல்யாணின் ரசிகர்கள், ரேணு தேசாய் மறுமணம் செய்ய கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதே சமயம், நடிகர் பவன் கல்யாண், சமூக வலைதளம் மூலம் ரேணு தேசாயின் நிச்சயதார்த்தத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...