நடிகர் கார்த்திக்கை ரசிக்கும் அனைத்து ரசிகர்களும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ என்ற வார்த்தையை மறந்திருக்க மாட்டார்கள். ‘மெளன ராகம்’ படத்தில் கார்த்திக் பேசும் இந்த வசனம் தற்போது அவரும் அவரது மகன் கெளதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் படத்திற்கு தலைப்பாக அமைந்துவிட்டது.
அப்பா - மகன் பாசத்தை வேறு ஒரு கோணத்தில் சொல்லியிருக்கும் இப்படத்தை ரசிகர்கள் யூகித்துவிட முடியாத அளவுக்கு பல திருப்பங்களுடன் திரு இயக்கியிருப்பதாக பலர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். ஹீரோயினாக நடித்திருக்கும் ரெஜினா கஸாண்ட்ரா இப்படத்தின் பாடல் காட்சியில் பிகினி உடையுடன் தோன்றியது படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது போல, சாம் சி.எஸ், இசையமைப்பில் சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்களும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
வரலட்சு சரத்குமார், சதிஷ், இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தை கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.
வரும் ஜூலை 6 ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 300 திரையரங்கங்களில் வெளியாக இருக்கும் ‘மிஸ்டர்.சந்திரமெளலி’ படத்திற்காக பிரத்யேகமான மொபைல் ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வினா விடை போட்டி ஒன்றும் நடத்தப்படுகிறது. இந்த மொபைல் ஆப் வினா விடை போட்டியில் பங்கேற்பவர்களுக்கு தினமும் செல்போன், வாட்ச், டீ சர்ட் உள்ளிட்ட பல பரிசுகளை படக்குழுவினர் வழங்க உள்ளனர்.
இந்த மொபைல் வினா விடை போட்டிக்கான மொபைல் ஆப் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கெளதம் கார்த்தி, கார்த்திக், ரெஜினா கஸன்ரா, வரலட்சுமி சரத்குமார், சதிஷ், தயாரிப்பாளர் தனஞ்செயன், ஒளிப்பதிவாளர் ரிச்சர் எம்.நாதன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ். என ஒட்டு மொத்த படக்குழுவினரும் கலந்துக் கொண்டார்கள்.
பனைமரம் வளர்க்கப்பட வேண்டும், பனைத்தொழிலும் பனைத் தொழிலாளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்...
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குமார சம்பவம்' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் சார்பாக வெற்றிமாறன் தயாரிப்பில், வர்ஷா இயக்கத்தில், அனுராக் காஷ்யப் வழங்கும் படம் ’பேட் கேர்ள்’...