பாரம்பரிய மருத்துவ துறையான யோகா மற்றும் ஆயுர்வேதம் பற்றி பேசும் ஹார்வார்ட் எம்.ஐ.டி மாநாட்டில் நடிகை கெளதமி பங்கேற்றுள்ளார்.
இதில் அவர் பேசுகையில், “ஹார்வார்ட் -எம்ஐடி மாநாடு ஆயுர்வேத யோகா, புற்றுநோய் தடுப்பிற்கான சர்வதேச மாநாட்டில் ஈர்க்கப்பட்டதன் மூலம் அதில் நான் பங்கேற்கிறேன்.
இது மேற்கத்திய மருத்துவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட நமது பாரம்பரிய மருத்துவ துறையான யோகா மற்றும் ஆயுர்வேதத்தினை நம் மனதிற்கு கொண்டு வரும் மாநாடாகும். நவீன மேற்கத்திய மருத்துவம் மாறுபடுவதன் மூலம் நீண்ட காலமாக நோயாளிகளுக்கு நமது பழைமையான பாரம்பரிய மருத்துவம் பயன்படுகிறது.
பாரம்பரியம் மற்றும் நவீன விஞ்ஞானங்கள் இரண்டுமே அவற்றின் மதிப்பினை கொண்டு ஒரு சாதாரண மனிதனின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது என்றால் அது இன்றியமையாது.
எங்களுடைய லைப் அகெயின் பெளண்டேஷனானது ஒவ்வொரு நபரின் வாழ்க்கையை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்க உதவுவதோடு அவர்களின் வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்க்கு அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
#WorldBookofRecords-ல் எங்களுடைய பவுண்டேஷனுக்கு சிறந்த சேவைக்கான சான்றிதழ் தந்தமைக்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...