பிப்டி பிப்டி பிலிம்ஸ் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜி.வி.எஸ்.புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘போத’. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி சுரேஷ்.ஜி இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் பல முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.
விக்கி, வினோத் முன்னா, மிப்பு, ஈஸ்வர், சண்முகசுந்தரம், ராகுல் தாத்தா, வீரா, சக்திவேல் தங்கமணி, ரமணி ராமச்சந்திரன், ரிஷா மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ரத்னகுமார் ஒளிப்பதிவு செய்துளார். தியாகராஜன் படத்தொகுப்பு செய்ய, லலிதானந்த் பாடல்கள் எழுதியுள்ளார். சங்கர் நடனப் பயிற்சியை கவனித்துள்ளார்.
விஜய் சேதுபதியின் ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, விரைவில் வெளியாக இருக்கும் ‘ஜுங்கா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த சித்தார்த் விபின் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
வாழ்க்கையை தேடி சென்னை வரும் இளைஞர் சினிமாவில் நடிக்க துடிக்கிறான். அதற்காக அவன் தேர்ந்தெடுத்த பாதை அவனை சிக்கலில் சிக்க வைக்கிறது. அதில் இருந்து அவன் மீள போராடுவதும், மீண்டானா இல்லையா, என்பதும் தான் இப்படத்தின் கதை.
இப்படத்தின் பாடல்கள் நேற்று காலை சூரியன் எப்.எம்-ல் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து நேற்று மாலை படக்குழுவினர் பத்திர்கையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குநர் சுரேஷ்.ஜி, “பணம் இல்லாம எதையும் சாதிக்க முடியாது, அதே சமயம் பணத்தால் எல்லாத்தையும் சாதித்து விட முடியாது, என்பதை களமாக கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறேன். ஆக்ஷன் சஸ்பென்ஸ் படமாகவும் அதே சமயம் காமெடியாகவும் படத்தை கையாண்டிருக்கிறேன்.” என்றார்.
இப்படம் அடுத்த மாதம் உலகம் முழுவதும் வெளியாகிறது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...