விரைவில் வெளியாக உள்ள ‘ஒரு கனவு போல’ படத்தை தயாரித்துள்ள இறைவன் சினி கிரியேஷன்ஸ் சி.செல்வகுமார், தனது அடுத்த தயாரிப்பாக ‘வீரத்திருவிழா’ என்ற படத்தையில் வெளியிட இருக்கிறார்.
சத்யா என்ற புதுமுகம், செல்வம், செல்வா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க்ம் இப்படத்தில் கதாநாயகியாக தேனிகா அறிமுகமாகிறார். மற்றும் பொன்வண்ணன், சிந்தியா, நசிர், காதல் சுகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஹார்முக் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு இ.எஸ்.ராம் இசையமைத்துள்ளார். இவர் ‘கோழிகூவுது’, ‘ஒரு கனவு போல’ படங்களுக்கு இசையமைத்துள்ளார். சதிஷ் எடிட்டிங் செய்ய, தயாரிப்பு மேற்பார்வையை கார்த்திக் கவனித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி விஜய்முரளிதரன் (எ) வைரமணி இயக்கியுள்ளார்.
“ஜல்லிக்கட்டு தடை காரணமாக தாமதமாக வெளிவரும் இப்படமே தமிழில் ஜல்லிக்கட்டை வைத்து தயாரிக்கப் பட்ட முதல் படம்” என்று கூறிய இயக்குநர் படம் குறித்து மேலும் கூறுகையில், “இப்படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு வாழ் மக்கள் இருக்கும் இடத்தை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படம். அந்த காலத்தில் ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு இல்லை. வீரத்தின் வெளிப்பாடு தான் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டுக்காக ஐந்து இளைஞர்கள் ஈடுபட்டு ஜல்லிக்கட்டில் வென்று ஊருக்கு எப்படி நல்ல பெயரை எடுத்து தருகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. ஊரின் பஞ்சாயத்து தலைவராக பொன்வண்ணன் நடித்துள்ளார்.
முழுக்க முழுக்க கிராமப்புற மக்களின் வாழ்வியலை சொல்லும் படமாக வீரத்திருவிழா உருவாகி உள்ளது.
காரைக்குடி, அமராவதி புதூர், சிராவயல், ஆராவயல் ,நேமம், மற்றும் மேட்டூர் பெரியதண்டா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.” என்றார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...