Latest News :

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொன்னம்பலம் பற்றி வெளியான திடுக் தகவல்கள்!
Friday June-29 2018

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் பெரிய அளவில் ஹிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், முதல் சீசனைப் போல இரண்டாவது சீசன் பரபரப்பாக இல்லை என்றும், ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

 

இதற்கிடையே, முதல் சீசனில் இல்லாத ஒரு அம்சமாக பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கும் சில விஷயங்களை மிட் நைட் மசாலா, மார்னிங் மசாலா என்ற தலைப்புகளில் நிகழ்ச்சி குழு ஒளிபரப்பி வருகிறது. இதில், போட்டியாளர்கள் தங்களது பர்சனல் லைப் குறித்து பேசுவது, கவர்ச்சியாக உடை அணிவது போன்றவைகள் இடம்பெறுகிறது. அதே சமயம், இவற்றில் சில எபிசோட்கள் டிவியில் ஒளிபரப்பாமல் இண்டர்நெட்டில் மட்டுமே ஒளிபரப்பாகி வருகிறது.

 

அந்த வகையில், இண்டர்நெட்டில் ஒளிபரப்பான எபிசோட் ஒன்றில், பிக் பாஸ் போட்டியாளர் நடிகர் பொன்னம்பலம் தன்னைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்களை கூறியிருக்கிறார்.

 

அதாவது, அவர் மதுவுக்கு அடிமையானவராம். மது குடிக்க உட்கார்ந்தார் என்றால் இரண்டு புல் அடிப்பாராம். அப்படி ஒரு முறை அவர் மூன்று புல் அடித்துவிட்டு சுழ நினைவே இல்லாமல் ஆகிவிட்டாராம். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த போது மருத்துவர்கள் இறந்துவிடுவார், என்று கூறினார்களாம். ஆனால், பொன்னமபலம் சில நாட்களுக்கு பிறகு எப்போதும் போல எழுந்து நடமாட தொடங்கிவிட்டாராம். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியதாம். இதற்கு காரணம் தனது நம்பிக்கை தான் என்றும், தனது மன வலிமையே தனது உடல் ஆரோக்கியத்திற்கு காரணம், என்றும் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

 

அதுமட்டும் அல்ல மது பழக்கத்தை விடுவதற்காகவே பிக் பாஸ் வீட்டுக்குள் 100 நாட்கள் இருக்க பொன்னம்பலம் வந்திருக்கிறாராம். ஆனால், எந்த வேலையும் செய்யாமல் ஒரே இடத்தில் இருப்பதே தன்னை கொன்று விடுமோ, என்று அச்சமும் அவருக்கு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related News

2903

ஜெம்பிரியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் 'பாம்' திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
Saturday August-30 2025

ஜெம்பிரியோ பிக்சர்ஸ் (GEMBRIO PICTURES) சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்”...

'யோலோ' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
Saturday August-30 2025

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S...

‘காந்தி கண்ணாடி’ மூலம் சிவகார்த்திகேயனுடன் மோதுகிறீர்களா ? - நடிகர் பாலா விளக்கம்
Friday August-29 2025

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமடைந்து, சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பலருக்கு உதவி செய்ததால், அவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது...

Recent Gallery