பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான அக்டோபர் 1 ஆம் தேதியை, இனி ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார்.
இதையடுத்து, சினிமா துறையை சேர்ந்த பலர் தமிழக அரசுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நன்றி தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தென்னிந்திய நடிகர்கள் சங்கமும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த கலைஞரும், கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியே, தாதாசாகேப் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று கலைத்துறைக்கு பெருமையை ஈட்டித்தந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளான அக்டோபர் 1 ஆம் தேதியை, இனி ஒவ்வொறு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருக்கிறார்.
இந்திய அளவிலும், உலகெங்கும் வாழும் தமிழர்களாலும் கொண்டாடப்படும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களது கலைச் சேவையை பாராட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் சார்பாகவும், ஒட்டுமொத்த தமிழ் திரைத்துறையினர் சார்பாகவும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...