லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நயந்தாரா, சினிமாவில் எப்படி பிஸியோ அதுபோல் காதலிலும் பிஸியாகவே இருக்கிறார்.
தனது இயக்குநர் காதலருடன் அவ்வபோது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவர், அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மகிழ்ச்சியடைந்து வருவதோடு, தனது காதலருக்காக பல முன்னணி நடிகர்களிடம் வாய்ப்பும் கேட்டு வருகிறாராம்.
அந்த வகையில் தான் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தில் எந்த நிபந்தனையும் இன்றி நடிக்க சம்மதித்தவர், தனது காதலர் அஜித்திடம் கதை சொல்வதற்கான வாய்ப்பை வாங்கி கொடுத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.
அதே போல், இவர்களது காதலைப் பார்த்து சிலர் காண்டாகவும் செய்கிறார்கள். அவர்களை மேலும் கடுப்பேற்றும் வகையில் நயந்தாராவும், அவரது காதலரும் சென்னையின் முக்கியமான பகுதி ஒன்றில் இருக்கும் சொகுசு அப்பார்ட்மெண்ட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தன்னுடன் சேர்ந்து வாழும் தனது காதலருக்கு நயந்தாரா பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறாராம். அதில் முக்கியமான ஒன்று சிகரெட் பிடிக்க கூடாது, என்ற கட்டுப்பாடாம். அதாவது, தான் இருக்கும் வீட்டில் சிகரெட் பிடிக்க கூடாது, என்று நயந்தாரா அவரது காதலருக்கு தடை போட்டிருக்கிறாராம். இதனால், வீட்டுக்கு செல்வதற்கு முன்பாக தெரிவில் நின்று இயக்குநர் சிகரெட் பிடித்துவிட்டு போவாராம்.
இரவு நேரங்களில் நயந்தாரா அப்பார்மெட்ண்ட் அருகே இருக்கும் பிரபல ஷாப்பிங் மால் அருகே, தெருவில் நின்றுக்கொண்டு இயக்குநர் சிகரெட் புகைப்பதை பலர் பல முறை பார்த்திருக்கிறார்களாம்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...