கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம் 2’. இப்படத்தின் முதல் பாகம் ரிலீஸின் போது கமல்ஹாசன் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கொண்டதால், இரண்டாம் பாகம் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரைலர் வெளியானது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என்று மூன்று மொழிகளில் வெளியான டிரைலர் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும், டிரைலர் வெளியீட்டின் போது, “விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிர்ப்பு வந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கமலிடம் கேட்ட போது, “அப்படி ஏதும் பிரச்சினை வராது என்று நினைக்கிறேன், அதையும் மீறி பிரச்சினை வந்தால் அதை அரசியல் ரீதியாக எதிர்கொள்வேன், அதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்து விட்டேன்” என்று கூறினார்.
இதற்கிடையே, ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகி அதுவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. கமல்ஹாசனின் குரலில் உருவாகிய”நானாகிய நதிமூலமே...” என்ற அந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், ‘விஸ்வரூபம் 2’ படத்தினை வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸ் செய்யப் போவதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. எனினும் இதில் மாற்றம் ஏற்படலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...