செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மோகன்லால், சமுத்திரக்கனி, அல்லு சிரிஷ், போமன் இரானி என்று தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். ஹீரோயினாக சயீஷா நடிக்கிறார்.
பயணம் தொடர்பான கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் தொடங்கி, அங்கேயே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, ஜூலை 1,2 ஆகிய தேதிகளில் லண்டனில் உள்ள ஜிப்சன் ஹால் என்ற இடத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சூர்யா மற்றும் படக்குழுவினரை இலவசமாக நேரில் பார்க்கலாம், என்ற அறிவிப்பு ஒன்றை லைகா நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டது. இதனால் லண்டனில் இருக்கும் சூர்யா ரசிகர்கள் பெரும் ஆவலோடு சூர்யாவை நேரில் பார்க்க காத்திருந்தார்கள்.
இந்த நிலையில், லைகா நிறுவனம் வெளியிட்ட அந்த செய்தி தவறுதலானது, என லைகா நிறுவனமே தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், தவறுதலுக்கு ரசிகர்களிடம் மன்னிப்பும் அந்நிறுவனம் கேட்டுள்ளது. இதனால், சூர்யா ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...