குளோபல் பிலிம்ஸ் சார்பில் டெல்லி ஆர்.சிவா தயாரிக்கும் படம் ‘இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்’. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.சிவா இயக்குநராக அறிமுகமாகிறார்.
மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் புதுமுகம் திவ்யா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கிரேன் மனோகர், லொள்ளு சபா மனோகர், மூர்த்தி, ஈ.ராமதாஸ், நெல்லை சிவா, டெல்லி ஆர்.சிவா, முத்துக்காளை, சுப்புராஜ், டவுட் செந்தில், மிப்பு, கலக்கல் சத்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் எஸ்.குமரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ராதிகா, எஸ்ரா எடிசன், சிவராக், கார்த்தி ஆகியோர் நடனம் அமைக்க, எஸ்.ஆர்.பிரபா தயாரிப்பு நிர்வாகத்தை கவனித்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் ஏ.ஆர்.சிவா கூறுகையில், “நண்பர்கள் மூவருடன் ஊரில் சுத்திக்கொண்டு இருப்பவர் மகேந்திரன். இவர்கள் சீரியசாக செய்யும் வேலைகள் எல்லாம் காமெடியில் முடியும். இதனால் இவர்களின் அட்டூழியங்களை தாங்க முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.
மகேந்திரனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்து அவனது சேட்டைகளுக்கு முடிவு கட்ட நினைக்கும் அவரது தாய்மாமன் திருமணம் குறித்து மகேந்திரனிடம் பேச, அவரோ பதறுகிறார். தனது சுதந்திரமே பறிபோய் விடுமே என்று எண்ணி மாமவிடம் கல்யாணம் வேண்டவே வேண்டாம் என்று கூறுகிறார். அதற்கு அவரது மாமாவோ, “நான் சொல்ற வேலைய வெற்றிகரமாக முடித்தால் கல்யாணத்தை நிறுத்தி விடுகிறேன், முடிக்கவில்லை என்றால் என் மகளை உனக்கு கட்டி வைத்துவிடுவேன்” என்று கூற, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை மிகுந்த நகைச்சுவையுடன் கூறியிருக்கிறோம்.” என்றார்.
திருவண்ணாமலை, காஞ்சி சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படம், தற்போது பின்னணி வேலைகளில் இருக்கிறது.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...