கமல்ஹாசன் தொகுத்தி வழங்கும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் தற்போது எலிமினேஷன் தொடங்கியுள்ளது. அதனால், இந்த வாரம் வீட்டில் உள்ள ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்.
மும்தாஜ், மமதி, பொன்னம்பலம், அனந்த் வைத்தியநாதன் ஆகியோரது பெயர் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றிருக்கிறது. இவர்களில் யார் வெளியேறுவார்கள், என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 2-வில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்து தகவல் கசிந்துள்ளது. அதாவது, மமதி சாரி தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறாராம். இந்த தகவல் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து வெளியாகியிருப்பதால், இந்த வாரம் மமதி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது உறுதி.

பிக் பாஸை திட்டிய மும்தாஜுடன் மிக நெருக்கமாக இருக்கும் மமதி, வெளியேறிவிட்டால் மும்தாஜ் இனி தனி ஆளாக இருக்க வேண்டும், அப்படி அவர் தனிமைப் படுத்தப்படும் போது, முதல் சீசனில் ஓவியா எப்படி இருந்தாரோ அதுபோல மாறும் வாய்ப்புக் இருக்கிறது என்பதால், இனி பிக் பாஸ் சீசன் 2 படு விறுவிறுப்பாக நகருமாம்.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன்...
காந்திமதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, ’அங்காடித்தெரு’ மகேஷ், ’திருக்குறள்’ குணாபாபு நடிப்பில், 1990-களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘தடை அதை உடை’...
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்டப் பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'டியூட்'...