சினிமாவில் அறிமுகமான நடிகைகள் பலர் திருமணத்திற்குப் பிறகு தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் நடித்து பிரலமாகி வருகிறார்கள். அந்த வரிசையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’Mr&Mrs கில்லாடிஸ்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியிருப்பவர் ஜெனிபர்.
டிவி-க்கு முன்பாக சினிமாவில் ஹீரோயினாக நடித்திருக்கும் இவரது இயற்பெயர் ஜெனிபர் தான் என்றாலும், சினிமாவில் நந்திதாவாகவே இவர் அறியப்பட்டார்.
கஸ்தூரிரஜாவின் ‘காதல் ஜாதி’ படத்தில் தனது 14 வயதில் நடித்த இவர், ‘ஈர நிலம்’ படத்தில் நடித்த போது பாரதிராஜா தான் நந்திதா என்று பெயர் வைத்துள்ளார். தொடர்ந்து அந்த பெயரிலேயே ஒரு சில படங்களில் நடித்த நந்திதா, சில படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியதோடு, பல படங்களில் நடன கலைஞராகவும் பணியாற்றியிருக்கிறார்.
பிறகு ஒளிப்பதிவாளர் காசிவிஸ்வநாதனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர் செண்டிமெண்டாக பாரதிராஜா வைத்த நந்திதா என்ற பெயரை மாற்றிக்கொண்டு, தனது இயற்பெயரான ஜெனிபராக தற்போது நடித்து வருகிறார்.
19 வயதில் திருமணம் செய்துக்கொண்ட நந்திதாவுக்கு தற்போது 11 வயதில் ஒரு மகன் இருக்கிறார். தற்போது டிவி மற்றும் சினிமா என்று தொடர்ந்து நடித்து வருபவர், அம்மா, அக்கா, அண்ணி போன்ற வேடங்கள் வந்தால் நிராகரித்து விடுகிறாராம்.
எதற்காக, என்று கேட்டால், எனக்கு என்ன அவ்வளவு வயதாகிவிட்டதா என்ன, என்று செல்லமாக கோபப்படுகிறார்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...