Latest News :

படமாகும் வேளச்சேரி போலீஸ் என்கவுண்டர் சம்பவம் - சரத்குமார் நடிக்கிறார்
Monday July-02 2018

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கியில் கொள்ளையடித்த வடமாநில இளைஞர்களை வேளச்சேரி குடியிருப்பு பகுதியில் வைத்து போலீஸார் என்கவுண்டர் செய்த சம்பவம் திரைப்படமக உருவாகிறது. இதில் சரத்குமார் என்கவுண்டர் போலீஸாக நடிக்கிறார்.

 

வி.ஆர்.மூவிஸ் சார்பாக டி.ராஜேஸ்வரி தயாரிக்கும் இப்படத்திற்கு ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எஸ்.டி.வேந்தன் இப்படத்தை இயக்குகிறார். ஷான் - சினேகா நடித்த ‘இன்பா’ மற்றும் ‘மயங்கினேன் தயங்கினேன்’ ஆகிய படங்களை இவர் இயக்கியிருக்கிறார்.

 

இப்படத்தில் சரத்குமார் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்க, ஹீரோயினாக நடிக்கும் இனியா மனித உரிமை கழக அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடிக்க, இளம் ஜோடிகளாக அர்வி, கேரள புது வரவு நீரஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத்தொகுப்பு செய்கிறார்.

 

இன்றைய தேதியில் வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வரும் இளைஞர்களால் பல இடங்களில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கலாச்சார சீர்குலைவும் ஏற்படுகிறது. 

 

இப்படிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார். அந்த நிகழ்வுகளும் அதைச் சார்ந்த ஒரு என்கவுண்டர் ஆபரேஷனுக்கு தான் இந்த ’வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' என பெயரிட்டுள்ளனர். அதைப் புதுவிதமான திரைக்கதையில் இளைஞர்களை ஈர்க்கும் விதமாக தர இருக்கிறார்களாம்.

 

இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் என்கவுண்டர் காட்சி வேளச்சேரியில் நடைபெறுவதால் இந்தப்படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' என்கிற டைட்டிலை வைத்துள்ளார்களாம்.. 

 

காஷ்மீர் துப்பாக்கிச்சூடு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என துப்பாக்கிச்சூடு என்பது அன்றாட நிகழ்வாக மாறிப்போய் விட்டது. அதை மனித உரிமை மீறல் என சொல்லக்கூடிய இனியாவுக்கும், இல்லையில்லை காவல்துறையின் செயல் நியாயமானதுதான் என்கிற சரத்குமாருக்கும்  நடக்கும் விவாதங்களும் அதை சார்ந்த நிகழ்வுகளும் தான் படத்தின் அடிநாதம். 

 

சரத்குமார் நிறைய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும், முழுக்க முழுக்க என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிப்பது இதுதான் முதல்முறை ஆகும்.

 

படம் குறித்து இயக்குநர் எஸ்.டி.வேந்தன் கூறுகையில், “காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தால் அதை மனித உரிமை மீறல் எனச் சொல்கிறார்கள். அதேசமயம் கிரிமினல்களால் பாதிக்கப்படும் காவல்துறையினருக்காக யாரும் கொடிபிடிப்பதில்லை, யாரும் போராடுவதில்லை, அப்பாவிகளை கொல்லவேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல.

 

ஆனால் எதிர்பாராதவிதமாக அப்பாவிகளும் கொல்லப்படுகிறார்கள் என காவல்துறை பக்க நியாயத்தை சரத்குமார் பேசுவதும், மனித உரிமை ஆர்வலராக வரும் இனியா பொதுமக்களுக்கான நியாயங்களை அவர்கள் பார்வையில் பேசுவதும்  என இரண்டு தரப்பினரின் வாதங்களையும் சமமாக சொல்லியிருக்கிறோம்.

 

இதற்கிடையே வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம், இளமையான காதல் ஜோடி, என்கவுண்டர், மனித உரிமை கழக விசாரணை என மாறிமாறி பரபரப்பாக நகரும் விதமாக இதுவரை இல்லாத வகையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம். கிளைமாக்ஸ் என்கவுண்டர் முடிந்ததும் நடைபெறும் மனித உரிமை ஆணையத்தின் விசாரணை இந்தப்படத்தின் ஹைலைட்டாக இருக்கும்.” என்றார்.

 

சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Related News

2929

இசைக்கலைஞராக அறிமுகமாகும் ஒய் ஜி மதுவந்தி மகன் ரித்விக் ராவ் வட்டி!
Monday June-30 2025

தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

Recent Gallery