பிரபல சினிமா பின்னணி பாடகி எஸ்.ஜானகி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட பல மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட்ல்களை பாடியிருப்பதோடு, பல்வேறு விருதுகளையும், 4 முறை தெசிய விருதும் வாங்கியிருக்கிறார். தற்போது 80 வயதாகும், அவர் தனது மகனுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே, பாடகி ஜானகியின் உடல் நிலை குறித்தும், அவர் உயிரிழந்துவிட்டதாகவும் அவ்வபோது வதந்திகள் பரவி வருகிறது. பல முறை இதுபோன்ற வதந்திகள் பரவி வரும் நிலையில், கடந்த வாரத்தில் கூட இதுபோன்ற வதந்தி ஒன்று வைரலானது.
இந்த நிலையில், பாடகி ஜானகி உடல் நிலை குறித்து வதந்தி பரப்புவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலையாள இசையமைப்பாளர்கள் சங்கம் கேரள காவல் துறையிடம் புகார் அளித்திருக்கிறது. இதையடுத்து, கேரள காவல் துறை ஜானகி உடல் நிலை குறித்து வதந்தி பரப்பும் நபரை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி, சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து, கேரள சைபர் க்ரைம் போலீசார், இந்த வழக்கில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். இதனால், பாடகி ஜானகி உடல் நிலை குறித்து வதந்தி பரப்புபவர் விரைவில் சிக்குவார் என தெரிகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...