Latest News :

24 மணி நேரத்தில் கமல் பிரச்சினையை தீர்த்து வைத்த குஷ்பு!
Monday July-02 2018

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த குஷ்பு, ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருப்பதோடு, விஜய், அஜித் போன்ற தற்போதைய முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். 

 

சினிமா மற்றும் டிவி என்று தொடர்ந்து தற்போது நடித்து வரும் குஷ்பு, திரைப்படம் மற்றும் சீரியல் தயாரிப்புகளிலும் பிஸியாக வலம் வருவதோடு, காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொருப்பிலும் இருந்து வருகிறார்.

 

இதற்கிடையே, நடிகர் கமல்ஹாசன் தொடர்பான பிரச்சினை ஒன்றை நடிகை குஷ்பு 24 மணி நேரத்தில் தீர்த்து வைத்திருக்கிறார்.

 

அதாவது கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக சென்னையில் போடப்பட்டிருக்கும் பிரம்மாண்ட செட்டில் சுமார் 400 க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குறைவானவர்களே அங்கு பணி புரிவதாக, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி புகார் தெரிவித்ததோடு, அந்த நிகழ்ச்சியில் இருந்து கமல் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். மேலும் பெப்சி சார்பாக போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர் அறிவித்தார்.

 

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட்ட சின்னத்திரை தயாரிப்பாளர்கல் சங்க தலைவர் நடிகை குஷ்பு, 24 மணி நேரத்தில் பிரச்சினையை தீர்த்து சுமூகமான முடிவை எட்டியுள்ளார்.

 

இதன் மூலம், பிக் பாஸ் நிகழ்ச்சி இனி எந்த பிரச்சினையும் இல்லாமல் நடைபெறும், என்று கூறிய ஆர்.கே.செல்வமணி, குஷ்பு ஊரில் இல்லாததால் இந்த பிரச்சினை நீடித்தது. ஆனால் அவர் ஊரில் இருந்து வந்ததும், பிரச்சினை குறித்து விசாரித்து 24 மணி நேரத்தில் தீர்த்து வைத்ததாக, பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Related News

2938

இசைக்கலைஞராக அறிமுகமாகும் ஒய் ஜி மதுவந்தி மகன் ரித்விக் ராவ் வட்டி!
Monday June-30 2025

தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

Recent Gallery