சிவா இயக்கத்தில் உருவாகும் ‘விஸ்வாசம்’ படத்தில் தந்தை, மகன் என அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இதில் மகன் வேடத்திற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ஸ்டுடியோவில் படமாக்கப்பட்ட நிலையில், தந்தை வேடத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதற்காக அஜித் நரைத்த தாடி, முடியுடன் கூடிய கெட்டப் பொட்டிருக்கிறார்.
இந்த நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தில் மகன் அஜித்துக்கு ஜோடியாக நயந்தாரா நடிக்க, தந்தை அஜித்துக்கு ஜோடியாக ‘காலா’ படத்தில் நடித்த ஈஸ்வரி ராவ் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
’ராமன் அப்துல்லா’, ‘குருபார்வை’, ‘சிம்மராசி’, ‘விரும்புகிறேன்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்த ஈஸ்வரி ராவ், திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘காலா’ படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்த இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
இதையடுத்து, பாலா இயக்கும் ‘வர்மா’ படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்து வரும் ஈஸ்வரிக்கு, ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. இந்த வாய்ப்பை ஈஸ்வரி ராவும் ஏற்றுக்கொண்டாராம்.
ரஜினி, அஜித் என இரண்டு முன்னணி நடிகர்களுடன் ஈஸ்வரி ராஜ் ஜோடி சேர்ந்திருப்பதால், இனி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...