Latest News :

கூலித்தொழிலாளி உன்னியை சந்தித்த கமல்ஹாசன்!
Tuesday July-03 2018

கமல் நடித்து இயக்கி தயாரித்துள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

 

இதற்கிடையே இப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் சங்கர் மகாதேவன் இணைந்து பாடிய ”உன்னைக் காணாது” என்ற பாடலை தொழிலாளி ஒருவர் தோட்டத்தில் அமர்ந்து பாடும் வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியானது.

 

வைரலான இந்த வீடியோவை பார்த்த சங்கர் மகாதேவன், தனத் டுவிட்டர் பக்கத்தில் பகிந்ததோடு, ”இதைக் கேட்கும்போது, இந்த நாட்டின் மீது பெருமையாக உள்ளது. கலாச்சாரத்தில் மிகவும் வலிமையாக இருப்பதுடன் இதுபோன்ற பல திறமைகளையும் கொண்டுள்ளது. யார் இவர்? இவரை நான் எப்படிக் கண்டுபிடிப்பது? இது குறித்து எனக்கு உதவி தேவை. இவருடன் இணைந்து பணிபுரிய விருப்பம்” என்று பதிவிட்டிருந்தார்.

 

இதையடுத்து, அந்த குரலுக்கு சொந்தக்காரர் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ராகேஷ் உன்னி என்பதும், அவர் ரப்பர் தோட்டத்தில் பணிபுரிபவர் என்பதும் தெரிய வந்தது.

 

இந்த நிலையில், ராகேஷ் உன்னியை நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்தார். கமல் முன்னிலையில் தனது குரல் வலத்தை காட்டிய ராகேஷ் உன்னிக்கு, கமல்ஹாசன் திரைப்பட வாய்ப்பும் வழங்கியுள்ளாராம்.

Related News

2945

இசைக்கலைஞராக அறிமுகமாகும் ஒய் ஜி மதுவந்தி மகன் ரித்விக் ராவ் வட்டி!
Monday June-30 2025

தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

Recent Gallery