விஷாலை வைத்து ‘துப்பறிவாளன்’ படத்தை இயக்கிய மிஷ்கின், அடுத்ததாக சாந்தனுவை வைத்து படம் இயக்க இருந்தார். இது குறித்து அறிவிப்பும் வெளியிட்ட நிலையில், படத்தை தயாரிக்க இருந்த நிறுவனம் திடீரென்று பின் வாங்கியது. இதனால், சாந்தனு - மிஷ்கின் கூட்டணி சேராமல் போய்விட்டது.
இந்த நிலையில், சாந்தனு நடிக்க இருந்த கதையை உதயநிதியை வைத்து மிஷ்கின் எடுக்க முடிவு செய்திருக்கிறார். இதற்கான அனைத்து பேச்சு வார்த்தைகளும் முடிவடைந்த நிலையில், படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள்.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் நடிப்பதோடு, தனது சொந்த நிறுவனத்தின் மூலம் உதயநிதி தயாரிக்கவும் செய்கிறார்.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன்...
காந்திமதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, ’அங்காடித்தெரு’ மகேஷ், ’திருக்குறள்’ குணாபாபு நடிப்பில், 1990-களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘தடை அதை உடை’...
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்டப் பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'டியூட்'...