கன்னடம் மற்றும் மலையாள சினிமாவில் தனது நடிப்பு திறமையால் பாராட்டு பெற்ற அனிஷா அம்ப்ரோஸ் ‘வஞ்சகர் உலகம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

வித்தியாசமான கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள வஞ்சகர் உலகம் படத்தில் அனிஷா அம்ப்ரோஸின் வேடம் பேசப்படும் விதத்தில் அமைந்திருக்கிறதாம்.

வஞ்சகர் உலகம் படத்தை இயக்கும் மனோஜ் பீதாவிடம், ஸ்கைப் மூலம் கதை கேட்டு அனிஷா அம்ப்ரோஸ் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம்.

பல கிளைக்கதைகளைக் கொண்ட வஞ்சகர் உலகம் படத்திற்கு எடிட்டர் ஆண்டனியின் பணி மிக முக்கியமானதாக இருக்குமாம்.

ஜோக்கர் புகழ் குரு சோமசுந்தரமும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...