செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ படம் தீபாவளியன்று வெளியாக இருக்கும் நிலையில், தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க தொடங்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் போமன் ஹிராணி, சமுத்திரக்கனி, மோகன்லால், அல்லு சிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹீரோயினாக சாயீஷா நடிக்கிறார்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிளே பாய் என்று செல்லமாக அழைக்கப்படும் ஆர்யா, இப்படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து படக்குழு எந்த தகவலையும் வெளியிடவில்லை என்றாலும், ஆர்யா தற்போது லண்டனில் இருப்பதோடு, நடிகர் போமன் இரானி வெளியிட்ட ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம், அவரும் சூர்யாவின் படப்பிடிப்பில் பங்கேற்றிருப்பது உறுதியாகியுள்ளது.

ஆர்யா வில்லனாக நடிப்பதை படக்குழு சஸ்பென்ஷாக வைத்திருக்க முடிவு செய்திருந்த நிலையில், தற்போது ஆர்யா மூலமாகவே அந்த சஸ்பென்ஷ் உடைந்திருக்கிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...