அரசியலில் ஈடுபடுவது குறித்து சமீபத்தில் தனது ரசிகர்கள் முன்னிலை ரஜினிகாந்த் சூசகமாக தெரிவித்ததை தொடர்ந்து தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டது. இருந்தாலும், ‘2.0’, ‘காலா’ என்று மறுபுறம் ரஜினிகாந்த் நடிப்பிலும் தீவிரம் காட்டி வருவதால், அவரது அரசியல் பேச்சு வழக்கமான ஒன்று தான், என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.
இதற்கிடையே, முன்னணி ஊடகத்தின் மூத்த அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரை ரஜினிகாந்த் சந்தித்து தனது அரசியல் எண்ட்ரி குறித்து பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. மேலும், ரஜினிகாந்த் நண்பர்கள் சிலர், அவர் அரசியலில் ஈடுபடுவது உறுதி என்று அவ்வபோது பேட்டி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் திருச்சியில் சில நாட்களுக்கு முன்பாக நடத்திய கூட்டமே, ரஜினியின் அரசியல் ஒத்திகை தான் என்றும், அதில் பங்கேற்றவர்கள் பெரும்பாலானோர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் தனது படப்பிட்ப்பு வேலைகளை முடித்துவிட்டு, தீவிர அரசியல் பணியில் ரஜினிகாந்த் ஈடுபடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வரும் ரஜினிகாந்த், கட்சியின் கொடியை ரெடி பண்ணிவிட்டதாக கூறப்படுகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...